Pages

Tuesday, June 3, 2014

கோச்சடையான் வசூல் நிலவரம்

125 கோடிகள் செலவில் மூன்று வருட உழைப்பில் உருவான படம் கோச்சடையான். படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவின் மைல்கல் என்றும், இந்திய திரையுலகின் சாதனை என்றும் பாராட்டினர். ர‌ஜினியின் மாஸ் இமே‌ஜ், இந்திய சினிமா ச‌ரித்திரத்தின் முந்தையை வசூல் சாதனைகளை தூளாக்கும் எனவும் கூறப்பட்டது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் 3டி திரைப்படத்தின் வசூல் எப்படி?
Kochadaiyan
கோச்சடையானின் இந்திப் பதிப்பை பொறுத்தவரை சுமாரான ஓபனிங்கையே பெற்றுள்ளது. எக்ஸ்-மென், ஹீரோபன்டி படங்களுடன் கோச்சடையானின் ஓபனிங்கை ஒப்பிட முடியாது. முதலிரு படங்களின் வசூலுக்கு அருகில்கூட கோச்சடையானின் இந்திப் பதிப்பு இல்லை என இணையதளங்கள் கூறுகின்றன.
 
கமலின் விஸ்வரூப் வடக்கே முதல் மூன்று தினங்களில் 11 கோடிகளை வசூலித்தது. அந்த வசூல்கூட கோச்சடையானுக்கு இல்லை. அதில் பாதியாவது வசூலித்திருக்குமா என்பதும் சந்தேகம்.

0 comments

Post a Comment