Pages

Tuesday, June 3, 2014

கேரள அரசின் திரைப்பட விருதுகள் - சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் தேர்வு

2013 - 2014 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதிராஜா தலைமையில் ஏழு பேர் கொண்ட நடுவர்குழு விருதுக்குரிய படங்களை தேர்வு செய்தது. இந்த விருதுகள் கேரளாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் கேரளாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. இயக்குனர்களுக்குள்ளேயே கடும் விமர்சனங்கள் எழும். இந்தமுறை சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு நடிகர் சுராஜ் தேர்வு செய்யப்பட்டதை மையமாக வைத்து சர்ச்சை வெடித்தது.
சுராஜ் தொலைக்காட்சி தொடரில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர். மிமிக்ரி செய்வதில் வல்லவர். இன்றைய தேதியில் மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். அதேநேரம் குணச்சித்திர வேடங்களையும் சிறப்பாக செய்பவர். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு சுராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பிஜு இயக்கிய பேரறியாதவர் என்ற படத்தில் துப்புரவு தொழிலாளியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சுராஜுக்கு இந்த விருது கிடைத்தது.
 
தேசிய விருது அறிவிக்கப்பட்ட இரண்டு தினங்களில் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய விருது கிடைத்ததால் மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் சுராஜுக்கு கிடைக்கும் என மொத்த கேரளாவும் நம்பியது.

ஆனால் ஷ்யாம்பிரசாத்தின் ஆர்டிஸ்ட் படத்தில் கண் தெரியாத ஓவியக் கலைஞனாக நடித்த ஃபகத் பாசில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். அப்படத்தில் நடித்த ஆன் அகஸ்டின் சிறந்த நடிகையாகவும், ஷ்யாம்பிரசாத் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

0 comments

Post a Comment