Pages

Tuesday, June 3, 2014

இந்திய மோடி அரசாங்கத்தின் முதலாவது வலுவான கோணல்.‏

dcp4757575
தென் இந்திய மானிலமான தமிழ்நாட்டில் ஏறக்குறைய எட்டுக்கோடி தமிழர்கள் வசிக்கின்றனர் அயல் மானிலமான கர்னாடகா மானிலத்தில் ஒரு கோடி தமிழர்கள் வாழுகின்றார்கள். பம்பாய் மற்றும் டில்லி உட்பட பரவலாக ஒருகோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
அனைத்தையும் கூட்டினால் பத்துக்கோடி தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.  நாடு கடந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கணக்கு கூட்டினால் இன்னும் அதிகமாகலாம்.
ராஜபக்‌ஷ சிங்களவன் இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இருபது இலட்சம் அதில் ஒன்றரைக்கோடி சிங்களவர்கள் வாழுகின்றனர்.  சிங்களவர்களுக்கு என்று ஒரு இனவாத அரசு இருக்கிறது,  தமிழர்களுக்கு என்று தனியாக அரசு எதுவும் இல்லை ஆனால் இந்திய ஆட்சி அதிகாரத்துக்குட்பட்டு  தன்னாட்சி அதிகாரம் கொண்ட மானில அரசு ஒன்று தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் அகில இந்திய மானிலங்கள் அளவில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்ட கட்சியாகவும் தமிழகத்தை ஆளும் பெரும்பான்மை அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட வலிமையான கட்சியாகவும் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக இருந்துவருகின்றது.
ராஜபக்‌ஷ ஒரு படுகொலையாளி, இனப்படுகொலையாளி,  போர்க்குற்றவாளி, பெண்கள்  குழந்தைகளை கற்பழித்து கொன்ற இலங்கையின் முப்படைகளின் தளபதி,  உலகச் சட்டங்களைக்கூட  மதிக்காமல் சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வருகிறார் அப்படிப்பட்ட ஒருவரை இந்திய பிரதமராக ஒருவர் பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று எட்டுக்கோடி தமிழர்களின் தலைவியாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கேட்டுக்கொண்டார். இன்னும் சில இந்திய மானில முதலமைச்சர்களும் கேட்டுக்கொண்டனர்.
இந்திய துணைக்கண்டத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருபத்தாறாம் திகதி பதவி ஏற்க இருந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆளுமைக்குட்பட்ட காலகட்டத்தில் எந்தவிதமான வெளியுறவுச் சட்ட சம்பிரதாய அனுமானங்களையும் கடைப்பிடிக்காமல் ராஜபக்‌ஷவை வரவேற்பதே  பாரதிய ஜனதாகட்சியின் முதற் சடங்காக ஒரு வாரங்களுக்கு முன்னரே ராஜபக்‌ஷவுக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டுவிட்டது.
மோடி பிரதம அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து பதவியை ஏற்றுகொண்டது இன்று 26-05-2014 மாலை ஆறு மணியளவில்,  அழைப்பு சென்ற வாரம் அனுப்பப்பட்டுவிட்டது.
இங்கு கவனிக்கப்படவேண்டிய சங்கதி என்னவெண்றால் (ஈழத்தமிழர்களை விட்டு விடுவோம்.) பத்துக்கோடி தமிழர்களுக்கு பழைய ஆட்சியாளர்கள் மதிப்பளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் புதிய இந்தியாவும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  ஒரு மானிலத்தின் முதலமைச்சர் அவர்களை ஒரு பொருட்டாகவே பாஜகட்சியும் முதன்மை மந்திரியாக பதவியேற்கும் மோடியும்  கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
மோடி ஆரிய வம்ஷத்தவர்,  ராஜபக்‌ஷவின் பூர்வீகம் மேற்கு வங்காளம் ஒரிசா மானிலம், ராஜபக்‌ஷவும் ஒரு ஆரியன். என்பதினாலோ என்னவோ ஜெயலலிதாவும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்,
இது நிச்சியமாக இந்தியாவை ஆள இருக்கும் புதிய அரசின் முதற் கோணலாக கொள்ளமுடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னைய முதலமைச்சர் கருணாநிதிபோல விரைவில் நிறம்மாறக்கூடிய குணாம்ஷம் கொண்டவரில்லை என்பதே இந்தக் கோணால் நிமிர்த்த முடியாத கோணலாகிவிடும் என்று நம்பி பதிவு செய்யப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்றால் என்னத்தை பார்க்க இருக்கிறீர்கள் என்று பட்சி சொல்லுகிறது.

0 comments

Post a Comment