மனநல பிரச்னைகள் தொடர்பான சிறந்த கட்டுரைக்களுக்கு ஸ்கார்ஃப்-பிஐஐ ஊடக விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மே 24-ஆம் தேதி, உலக மனச்சிதைவு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மனச்சிதைவு ஆய்வு மையம் (ஸ்கார்ப்) சார்பில் நடைபெற்ற விழாவில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் பேசியதாவது:
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதழியல் தற்கால மாற்றத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகப் போரின் தாக்கத்தை மக்களிடம் கொண்டு சென்றதிலும் இதழியல் துறைக்கு பெரும் பங்குண்டு. அதன் பின்னர் போர் நடைபெற வேண்டுமா என்ற உணர்வையும் இதழியல் ஏற்படுத்தியது. இந்த மனநல மாற்றத்துக்கு இதழியல் உறுதுணையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது என்றார் அவர்.
வழக்கு மொழிப் பிரிவில் புதிய தலைமுறை வார இதழின் மூத்த உதவி ஆசிரியர் கீதா, ராஷ்ட்ர தீபிகா பத்திரிகையின் கோட்டயம் பதிப்பின் தலைமை நிருபர் ரெஜி ஜோசப், ஆங்கில மொழிப் பிரிவில் சமூக ஆர்வலர் ரேஷ்மா வள்ளியப்பன், மினி பி.தாமஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோழிக்கோடு பதிப்பின் மூத்த செய்தியாளர் எம்.அருண், செய்தியாளர் ஏ. சாம் பால் ஆகியோரின் கட்டுரைகள் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டன. மனநலம் குறித்து ஆய்வுப்பூர்வமாக இவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கான விருதுகளை ராஜீவ் மேனன் வழங்கினார். விழாவில் ஸ்கார்ஃப் இயக்குநர் ஆர்.தாரா, பிஐஐ இயக்குநர் சசி நாயர், ஸ்கார்ப்-பிஐஐ விருதுகள் குழுத் தலைவர் ஜெயா ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments
Post a Comment