ஈழத்துக்கு எதிரான இரண்டாவது கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் தற்போதைய அரசியல் முக்கிய அமைச்சுப் பொறுப்பொன்றை வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச.
இவரது கடந்த கால செயற்பாடுகளை அறிந்து கொண்டவர்களுக்கு இதுவொன்றும் அதிர்ச்சியைக் கொடுக்கும் விடயமாக அமைந்துவிடாது. ஏனென்றால் பெரும்பான்மை மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தடாலடியான கருத்துக்களை அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்ப்பதில் அவர் வல்லவர்.
தமது சுய இலாபத்துக்காகவே அரசுப் பக்கம் தாவிய அவருக்கு இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தற்போது விடுதலைப் புலிகளும் அதன் தலைவரான வே. பிரபாகரனும் இல்லாத நிலையில் எவருக்கு எதிராகப் போரை ஆரம்பிக்குமாறு இவர் கூறு கின்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதேவேளை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலிகளையும் தனி ஈழத்தையும் மையக் கருத்தாகக் கொண்டே தென்பகுதி அரசியல் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. தமிழர்களுக்கெனத் தனியானதொரு நாடு அமையுமானால் சிங்கள மக்கள் கடலில் விழுவதைத் தவிர வேறு வழியே இல்லையயனவும் அங்கு கூறப்பட்டது.
சிங்கள மக்களுக்கென இந்த நாடு மட்டுமே உள்ளதால் இந்த நிலையயனவும் அதற்குக் காரணம் கூறப்பட்டது. இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்றே கூற வேண்டும்
பிரபாகரன் கூட தமிழ் மக்களுக்கெனத் தனியானதொரு நாடு வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராடினாரே ஒழிய சிங்கள மக்களை இந்த நாட்டிலிருந்து விரட்ட வேண்டுமென ஒருபோதுமே கூறிய தாகத்தகவல் இல்லை. இந்த நிலையில் சிங்கள மக்களின் மன அமைதியைக் குலைக்கும் வகையில் இவ்வாறான பரப்புரைகள் இடம்பெறுகின்றமை இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தில் பெரும் பிளவுகளையே ஏற்படுத்தும்.
அர்த்தமற்ற அறை கூவல்
இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடும் போது:
நாம் தமிழ் ஈழத்தை ஒரு போதுமே கோரவில்லை. ஒன்றுபட்ட நாட்டுக்குள் பிரச்சினை எதுவுமின்றி ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றோம். இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையே மாகாண சபையூடாக வழங்க வேண்டும் எனத் தீர்க்கமாகக் கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரும் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாரேயயாழிய தனி ஈழத்தை வழங்குமாறு கேட்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அறைகூவல் அர்த்த மற்ற ஒன்றாகவே கொள்ளத்தக்கது.
ஒரு நாட்டின் அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் கருத்துகளை வெளியிடும்போது எவரது மனத்தையும் புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் அமைச்சராக விளங்குவதை ஏனோ அவர் மறந்து விட்டார் என்பது புரியவில்லை.
அதிகாரம் இல்லாத மாகாண சபை
இலங்கையின் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதில் கூறப்பட்டவாறு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் எவையும் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண சபை உட்பட ஏனைய மாகாண சபைகள் இந்த அதிகாரங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுவதில்லை.
ஏனென்றால் அவையாவும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில், ஆளும் கட்சியின் ஆளுகையின் கீழ் அமைந்துள்ளன. ஆனால் வடக்கு மாகாண சபை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தமிழர்களைப் பெருமளவு பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் இது உள்ளது.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்கள் வட மாகாணத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறு தரப்பினராலும் அபகரிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
வடக்கின் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர முடியாத நிலையும் காணப்படுகின்றது. அத்துடன் சட்டமும், ஒழுங்கும் சீரகுலைந்த நிலையில் காணப்படுகின்றன.
ஆனால் இவற்றையயல்லாம் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகம் வெறுமனே கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் அவலநிலையே தொடர்கின்றது.
இதன் காரணமாகவே 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் காணப்படும் அதிகாரங்களை வழங்குமாறு வடமாகாண முதல்வர் தொடக்கம் ஏனையோர் வரை வேண்டி நிற்கின்றனர். இவர்கள் எவரும் தனி ஈழத்தை ஒருபோதுமே கோரி நிற்கவில்லை.
தனிநாடுதான் தீர்வு என்றும் அடித்துக் கூறவில்லை. இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ, அவற்றையே எமக்கும் தாருங்கள் என்றே இவர்கள் வேண்டி நிற்கின்றனர். ஆனால் இதையே பெரிதுபடுத்தி தனி ஈழம் கேட்பதாகக் கூறி இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அரசு மனம் வைத்தால் எல்லாம் நடக்கும்
இலங்கையில் வாழுகின்ற சிங்கள மக்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளாகப் போர் தந்த அவலங்களை அவர்கள் மறந்து விடவில்லை. போரினால் வடக்குக் கிழக்கிலுள்ள மக்கள் மட்டுமன்றி தெற்கிலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர்.
உயிர் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில் இனம், மொழி, மதம் என்ற வேறு பாடுகளைக் காணமுடியாது. இந்த நிலையில் வேறுபாடு இல்லாததொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதுடன் அமைதியானதொரு சூழலையும் ஏற்படுத்த வேண்டும்.
இதனை அரசும் பெரும்பான்மையின மக்களும் மனம் வைத்தாலே நிறைவேற்ற முடியும்.
ஓங்கி ஒலிக்கும் இனவாதக் குரல்கள்
போர் என்ற சொல்லைக் கேட்டாலே மக்கள் அஞ்சி அலறும் இந்த வேளையில் இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச அறைகூவல் விடுப்பது அவரது பொறுப்பற்ற தன்மையையே வெளிக்காட்டுகின்றது.
மக்களின் இரத்தக் கண்ணீரில் குளிர்காய்வதற்கு அவர் விரும்புகிறார் போலும். இவரைப் போன்றவர்களை இன்னமும் அமைச்சரவையில் வைத் திருப்பதானது அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகின்றது.
மேர்வின் சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற போதிலும் அதற்குரிய கெளரவத்தை ஒருபோதுமே பேணி நடந்து கொள்வதில்லை. ஏறுமாறான கருத்துகளைக் கூறுவதும், செயல்களில் ஈடுபடுவதும் இவர்களின் வாடிக்கையாகவே மாறிவிட்டது.
ஆனால் ஆட்சித் தலைவரின் செல்லப்பிள்ளைகளாக வலம் வருகின்றனர்.
தமது இஷ்டம் போல செயற்படுகின்றனர். இனவாதக் கருத்துகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்டின் சாபக்கேடே இத்தகைய இனவாதிகள் தான். இவர்கள் இருக்கும் வரை இங்குள்ள இனங்களுக்கு இடையில் ஐக்கியம் என்பது கானல் நீராகவே தெரியும். மக்கள் என்று இவர்களின் சுயரூபத்தை அறிந்து புறமொதுக்கி விடுகின்றார்களே அன்றே இனங்கள் சகோதரத்துவமான உறவுகளைப் பேணிக் கொள்ள முடியும்.
ஆனால் இனவாதிகளின் கருத்துக்களுக்கு மக்கள் மதிப்புக் கொடுக்கும் வரை அவர்கள் ஓய்ந்துவிடப் போவதில்லை. தமது வேலைகளைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். அதுவரை மக்களின் தலைவிதியிலும் மாற்றங்கள் ஏற்படமாட்டாது.

0 comments
Post a Comment